டில்லி,

தமிழகத்தின் வறட்சி, வர்தா புயல் நிவாரண நிதியாக ரூ. 2014.45 கோடி வழங்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று கூடிய உயர்நிலைக்குழு இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்தியாவில் வறட்சி, மழை, வெள்ளம், புயல் போன்ற பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரணநிதியம் சார்பில் ரூ.4979.97 கோடி நிதியும், தேசிய ஊரக குடிநீர்த்திட்டம் சார்பில் ரூ40.67 கோடியும் உதவி வழங்கமுடிவு செய்யப்பட்டது.

இதில், தமிழகத்தின் வறட்சிக்காக ரூ.1748.28 கோடியும், வார்தாபுயலின் பாதிப்புக்கு ரூ.266.17 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால் தமிழகத்தின் வறட்சிக்கு ரூ.39565 கோடியும் வார்தா புயலுக்கு ரூ22 573 கோடி ரூபாயும் கோரப்பட்டிருந்த நிலையில் மத்திய அரசு கொடுக்கும் நிதியிலிருந்து விவசாயிகளை திருப்தி படுத்தமுடியுமா என கேள்வி எழுந்துள்ளது.

ஆனால் பாதிக்கப்பட்ட 10 மாநிலங்களில் தமிழகத்துக்குத்தான் அதிகளவில் நிதி வழங்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கும் உள்துறை அமைச்சகம், ஆந்திராவுக்கு ரூ.584.21 கோடியும் அசாமுக்கு ரூ269.40 கோடி இப்படி கர்நாடகம், மணிப்பூர், என பத்துமாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியை ஒப்பிட்டு விளக்கம் அளித்துள்ளது.