சென்னை:

மிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள மாவட்டங்களில் கூடுதல் மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.21 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. தமிழகத்தில், நேற்று  ஒரே நாளில் புதிதாக 1,515 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இதுவரை, 48,019 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் இதுவரை 34,245 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதைத்தொடர்ந்து, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கொரோனா தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக இந்த 4 மாவட்டங்களிலம் வரும் 19ந்தேதி முதல் 12 நாட்கள் முழு ஊரடங்கு  அமல்படுத்தப்படுவதாக தமிழகஅரசு அறிவித்துஉள்ளது.

இதைத் தொடர்ந்து  சென்னை, திருவள்ளூரில் கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக, மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு தேவையான  முகக்கவசங்கள், PPE, தெர்மல் ஸ்கேனர்கள் வாங்க ரூ.52 லட்சம் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. மேலும்,  கிருமிநாசினி பொருட்கள் வாங்க ரூ.31 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு தமிழகஅரசு அறிவித்து உள்ளது.