பெங்களூரு:

ரூ.23 ஆயிரம் கோடி மதிப்பிலான பெங்களூரு புறநகர் ரயில் திட்டத்துக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன.


இது குறித்து ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது, மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, ரயில்வே வாரியம் 650 ஏக்கர் நிலத்தை கொடுக்கும். ஒரு ஏக்கர் ஒரு ரூபாய் என்ற கணக்கில் வழங்கப்படும்.

ரூ.1,700 கோடி மதிப்பிலான இரு வழிப்பாதைக்கு கர்நாடக அரசு பாதிச் செலவை ஏற்கும். இந்த திட்டத்தின்படி, 160 கி.மீ தொலைவுக்கு 82 ரயில் நிலையங்கள் அமைக்கப்படும். அடுத்த 6 ஆண்டுகளில் திட்டம் நிறைவுபெறும் என்று தெரிவித்தனர்.