ஏர்இந்தியாவுக்கு ரூ. 2345 கோடி ரூபாய் முதலீடு: துணை மானியக் கோரிக்கையில் தகவல்

டில்லி:

பாராளுமன்ற மாநிலங்களவையில், மத்திய அரசின் ரூ.85,949 கோடிக்கான துணை மானியக் கோரிக்கையை நிதி அமைச்சர் அருண்ஜெட்லி இன்று தாக்கல் செய்தார்.

இதில் நஷ்டத்தில் இயங்கி வரும்  ஏர்இந்தியா விமான நிறுவனத்துக்கு ரூ. 2345 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

2018-19ம் நிதியாண்டில் ஏற்படும்  கூடுதல் செலவினத்தை மேற்கொள்ளும் வகையில், ரூ.85,948 கோடியே 86 லட்சம் தேவைப்படுவதாக கூறி துணை மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், பெரும்பாலானா நிதி பொதுத்துறை வங்கிகளுக்கு வழங்கப்படும் என்றும்,  அரசு பங்கு பத்திரங்கள் மூலம் 41000 கோடி ரூபாய் அரசுத்துறை வங்கிகளில் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், நஷ்டத்தில் இயங்கி வரும் விமான சேவை நிறுவனமான ஏர்இந்தியா வுக்கு  ரூ. 2345 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த  துணை மானியக்கோரிக்கை மீது விவாதம் தொடங்குவதற்கு முன், ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தியது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று மாநிலங்களவை காங்கிரஸ் துணைத்தலைவர் ஆனந்த் சர்மா மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி அமளி ஏற்பட்டதால், மாநிலங்களை 8வது நாளாக ஒத்தி வைக்கப்பட்டது.