சென்னை:

பொங்கல் பண்டிகையையொட்டி, வெளியான ரஜினியின் தர்பார் படம்,  எதிர்பார்த்த அளவுக்கு அவரது ரசிகர்களிடம் வரவேற்பு இல்லாத நிலையில், பெரும்பாலான தியேட்டர்களில் இருந்து எடுக்கப்பட்டு, வேறு படம் திரையிடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ரஜினியின் தர்பாரால் ரூ.25 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டும் விநியோகஸ்தர்கள், தங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று ரஜினியை சந்தித்து, முறையிட விநியோகஸ்தர்கள் சிலர்  சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியை சந்திக்கச் சென்றனர்.  ஆனால், அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அனுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான படம் தர்பார். ரஜினிகாந்த், நயன்தாரா ஜோடியுடன் பிரபல நடிகர்கள் நடித்த இந்த படம்  ஜனவரி 9-ந்தேதி  வெளியானது. லைக்ககா நிறுவனம் தயாரித்த இந்த படம்  ரூ150 கோடி வசூலித்ததாக ஆரம்பத்தில் கூறப்பட்டது.

ஆனால், படம் எதிர்பார்த்தப்பட ஓடவில்லை என்றும், சுமார் 40 சதவிகிதம் நஷ்டம் என படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த பிரச்சினையில், ஏற்கனவே  படத்தை விற்று கல்லா கட்டிய தயாரிப்பு நிறுவனமான லைக்கா கழன்றுகொண்ட நிலையில், இயக்குனர் முருகதாஸை சந்தித்தனர். அவர், ரஜினியை கைகாட்ட, அவர்கள் ரஜினியை சந்தித்து தங்களது நஷ்டத்தை ஈடுபட்ட கோரிக்கை வைக்க முயன்றனர்.

தர்பார் திரைப்பட விநியோகஸ்தர்களில் ஒரு பகுதியினர், எம்.ஜி அடிப்படையில்  ரஜினிகாந்த் மற்றும்  முருகதாஸ் ஆகியோரின் உத்தரவாதத்தின் பேரில் படத்தின் விநியோக உரிமையை வாங்கியதாக குற்றம் சாட்டினர், ஆனால் அவர்கள் ரூ.25 கோடி அளவுக்கு அருகில் இழப்பை எதிர்கொண்டனர். தங்களது இழப்புகளை மீட்க ரஜினிகாந்தை சந்திக்க முயற்சித்து வருகின்றனர்.

ஆனால்,  ரஜினிகாந்தை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை, மாறாக ஆர்.எம்.எம் வி.பி.சுதகரை சந்திக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டுக்கு இன்று விநியோகஸ்தர்கள் குழுவாக சென்றனர். இதை முன்கூட்டியே அறிந்துகொண்ட, ரஜினிகாந்த் வீட்டில் பாதுகாப்புக்காக ஏற்கனவே இருந்த போலீசாரும் மேலும் போலீசாரை குவித்துவிட்டார்.

இந்த நிலையில், அங்கு சென்ற விநியோகஸ்தர்களை, காவல்துறையினர் தடுத்து திருப்பி அனுப்ப முயற்சி செய்தனர். இதனால், அங்கு பரபரப்பை ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, விநியோகஸ்தர்களின் ஒரு தரப்பு மீண்டும் முருகதாஸ் அலுவலகத்துக்கும் மற்றொரு தரப்பு ரஜினிகாந்தின் ராகவேந்திரா மண்டபத்துக்கும் சென்றுள்ளனர்.  இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விநியோகஸ்தர்கள் ஆவேசமாக பேசும் காட்சி வீடியோ….