” ஐபிஎல் போட்டியில் கபில்தேவ் இருந்தால் ரூ.25 கோடிக்கு ஏலத்தில் எடுப்பார்கள் ”- சுனில் கவாஸ்கர்

ஐபிஎல் போட்டியில் கபில் தேவ் விளையாடினால் அவருக்கு ரூ.25 கோடி வரை கொடுத்து ஏலத்தில் எடுப்பார்கள் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

kabil

இந்தியாவில் கிரிக்கெட் திருவிழாவாக ஆண்டுதோற்கும் நடைபெறும் ஐபிஎல் போட்டியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஐபிஎல் போட்டியில் உள்நாட்டை தவிர்த்து வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகிறனர்.

2019ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டி தொடங்க உள்ள நிலையில் அதற்கான அணியையும், வீரர்களையும் தேர்வு செய்யும் வேலைகளில் கிரிக்கெட் சங்கம் ஈடுப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் பங்கேர்க ஆயிரம் பேர் விண்ணப்பித்த நிலையில் 346 வீரர்களின் பெயர்களை மட்டுமே இறுதி பட்டியலில் பிசிசிஐ அறிவித்தது.

இதனை தொடர்ந்து நேற்று முன் தினம் வீரர்களின் ஏலம் நடைபெற்றது. இதில் அந்தந்த அணி நிர்வாகம் சார்பில் வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இந்த ஏலம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறுகையில், “ தற்போது ஐபிஎல் போட்டிக்கான ஏலகத்தில் கபில்தேவ் இருந்தால், அவர் ரூ.25 கோடிக்கு வாங்கப்படுவார் “ என கூறியுள்ளார்.

மேலும், ” 1983ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின் போது ஜிம்பாப்வே அதிக்கு எதிராக விளையாடிய போட்டியில் கபில்தேவ் 175 ரன்கள் எடுத்தது இன்றும் நினைவில் இருக்கிறது. ஒரு கிரிக்கெ வீரராக இன்றும் அவரது அபார சதத்தை எண்ணி வியக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

1983ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி வெற்றிப்பெற்ற போது அதில் சுனில் கவாஸ்கரும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-