சென்னை,

நாடு முழுவதும் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னையில் நடைபெற்ற விழாவில் 396 ஆசிரியர்களுக்க நல்லாசிரியர் விருது வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பேசியதாவது,

தமிழக அரசு சார்பாக பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ 26,932 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 6 ஆண்டுகளில் 40,633 ஆசிரியர்கள், 15,153 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

மேலும், தமிழகத்தில் 3,336 முதுகலை மற்றும் 748 கணினி ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது என்றும்,  இந்த ஆண்டு 5.40 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளது என்றும்,  கோவையில் ஆசிரியர்கள் தங்கும் இல்லம் ஏற்படுத்தப்படும் என்றும் கூறினார்.

அதைத்தொடர்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் குட்டிக்கதையை கூறி உரையை முடித்தார்.