வேலூர் மக்களவை தேர்தல்: தி.மு.க. பிரமுகர் வீட்டில் ரூ. 27 லட்சம் பறிமுதல்….! பரபரப்பு

--

வேலூர்:

வேலூர் மக்களவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு பிரசாரம் சூடுபிடித்து வருகிறது. இந்த நிலையில், கடந்தமுறை போலவே தற்போது திமுக பிரமுகர் ஒருவரின் தம்பி வீட்டில் இருந்து ரூ.27 லட்சம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 17வது மக்களவைக்கான தேர்தல் நடைபெற்றபோது, திமுகவினரின் பணப்பட்டுவாடா காரணமாக, நாட்டிலேயே வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் மட்டுமே ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், தற்போது வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.  வரும் ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடைபெற்ற உள்ளது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, வேலூரில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது  வேட்புமனு  ஜூலை11ந்தேதி தொடங்கி  உள்ளது. தற்போது அங்கு தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்து உள்ளனது.

வேலூர் பாராளுமன்ற தொகுதியில், திமுக சார்பில் கடந்தமுறை போட்டியிட்ட திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தும்,  அதிமுக கூட்டணி சார்பில் ஏசி சண்முகமே மீண்டும் போட்டியிடுகிறார்கள்.

இந்த நிலையில், வேலூர் தொகுதியில் தேர்தல் பறக்கும்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க பதுக்கி வைத்துள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, சத்துவாச்சாரியை அடுத்த வசூர் என்ற இடத்தில் திமுக பிரமுகர் வசூர் நடராஜன் என்பவரின் தம்பியும் ரியல் எஸ்டேட் அதிபருமான ஏழுமலை என்பவரின் வீட்டில் வருமானவரித்துறை யினர் மற்றும் தேர்தல் பறக்கும்படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

ரூ.27 லட்சம் கைப்பற்றப்பட் திமுக பிரமுகர் தம்பி ஏழுமலை வீடு

அதிகாரிகளின் அதிரடி சோதனை காரணமாக பரபரப்பு அடைந்தவர்கள், பணத்தை ஒரு பையில் போட்டு, வீட்டுக்கு வெளியே தூக்கி வீசி உள்ளனர். இதை கண்ட அதிகாரிகள், அந்த பையை கைப்பற்றினர்.  அதில், ரூ.27 லட்சம் இருந்தது தெரிய வந்தது.  இதையடுதது, அது தன்னுடைய பணம் தான் ஏழுமலை ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த முறை வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு தேர்தல் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது முதன்முதலாக தி.மு.க.வினரின் பணமே சிக்கியுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.