அரியானா அரசு : ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல் தங்கம் வென்றவருக்கு ரூ. 3 கோடி பரிசு

ண்டிகர்

சிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் பஜ்ரங் புனியாவுக்கு ரூ. 3 கோடி பரிசை அரியானா அரசு அறிவித்துள்ளது.

இந்தோனேசியா நாட்டில் 18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.  இந்த போட்டிகளில் இந்தியா, இலங்கை, சீனா உள்ளிட்ட 45 நாடுகளை சேர்ந்த 11500 வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்று வருகின்றனர்.

இந்தியாவின் முதல் தங்க பதக்கத்தை 65 கிலோ எடை கொன ஆண்கள்  மல்யுத்த  போட்டியில் பஜ்ரங் புனியா வென்றார்.  அரியானாவை சேர்ந்த இவர் இந்தியாவுக்கு இப்போட்டியில் முதல் தங்கப் பதக்கத்தை வென்றது பலரது பாராட்டையும் பெற்றது.

இவரது இந்த வெற்றியை பாராட்டிய அரியான அரசு பஜ்ரங் புனியாருக்கு ரூ. 3 கோடி பரிசு அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.