ரூ.13.90 கோடி பறிமுதல்: மக்களவைக்கு 30 பேர் மனு தாக்கல்: சத்யபிரதா சாஹு

 

சென்னை:

க்களவைக்கு இதுவரை  30 பேரும், சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு 3 பேரும் மனு தாக்கல்  செய்திருப்பதாக தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு தெரிவித்து உள்ளார்.

மேலும்,  தமிழகத்தில், தேர்தல் பறக்கும் படையால் இதுவரை ரூ.13.90 கோடி பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிட  29 ஆண்கள், 1 பெண் என 30 பேர் மக்களவை  வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்  என்றும், சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட இதுவரை 3 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளதாகவும்  கூறினார்.

ஒவ்வொரு மக்களவைத் தொகுதிக்கும் 2 செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள தொகுதிகளுக்கு மட்டும் தலா 3 செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும்,  தேர்தலில் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தமிழகம் முழுவதும் சோதனை நடத்தி வருகிறார்கள். தேர்தல் பறக்கும் படையால் இதுவரை 13.90 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் காரணமாக துப்பாக்கிகள் ஒப்படைக்க கூறியுள்ளதில், தமிழக்ததில் மொத்தம்  உரிமம் பெற்றுள்ள 21999 துப்பாக்கிகளில் 18 ஆயிரம் துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 32 துப்பாக்கிகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.