சுவிஸ் வங்கியில் கேட்பாரற்று உள்ள ரூ.300 கோடி இந்தியப் பணம்

ஜூரிச்

சுவிஸ் வங்கிக் கூட்டமைப்பு வெளியுட்டுள்ள தகவலின் படி அந்த வங்கிகளில் ரூ.300 கோடி இந்தியப் பணம் யாரும் உரிமை கொண்டாடாமல் உள்ளது.

இந்தியர்கள் பலர் தங்களின் கருப்புப் பணத்தை சுவிஸ் வங்கியில் முதலீடு செய்துள்ளதாக பல வருடங்களாக சொல்லப்படுகிறது.    இவ்வாறு பதுக்கப்பட்ட கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கு மீட்டு வருவதாக உறுதி கூறி பாஜக ஆட்சிக்கு வந்தது.    தேர்தல் பிரசாரத்தின் போது மோடி இந்தப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்தால் ஒவ்வொரு இந்தியருக்கு ரூ.15 லட்சம் கிடைக்கும் அளவுக்கு பணம் சுவிஸ் வங்கியில் முதலீடு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

உலக வங்கிகள் பரிந்துரையின்படி சுவிஸ் வங்கிகள் கூட்டமைப்பு வருடந்தோறும் தங்களின் பரிவர்த்தனையை தெரிவிக்க ஆரம்பித்தன.   வங்கிகளின் விதிப்படி மொத்த தொகையை தெரிவிக்கும் இந்த அமைப்பு எந்த கணக்கில் இந்த பரிவர்த்தனை நிகழ்ந்தது என்பதை தெரிவிப்பதில்லை.   இவ்வாறு கடந்த 2015 டிசம்பரில் வெளி வந்த அறிக்கையின் படி உரிமை கோரப்படாத தொகைகளின் விவரங்களை வெளியிட்டது.

கடந்த 2017 ஆம் ஆண்டு அறிக்கையின்படி  இவற்றில் 40 கணக்குகளின் தொகைகள் உரிமையாளர்களின் வாரிசுகளால் உரிமை கோரப்பட்டு அளிக்கப்பட்டுள்ளன.    தற்போது உரிமை கோரப்படாமல் சுமார் 3500 கணக்குகளில் பணம் உள்ளன.   அவற்றில் இந்தியக் கணக்குகளின் எண்ணிக்கை 6 ஆகும்.  இந்த கணக்குகளில் உள்ள மொத்தத் தொகை இந்திய மதிப்பின் படி ரூ.300 கோடி ஆகும்.

இந்த கணக்குகளின் உரிமையாளர்களின் இருப்பிடம் இந்தியா எனதெரியப்படுத்தி உள்ள அறிக்கையில் உரிமையாளர்களின் எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை.

You may have missed