அமிர்தசரஸ்:

சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை அமைக்க ரூ.3 ஆயிரம் கோடி செலவு செய்யும் நீங்கள், ஜாலியன்வாலா பாக்கில் உயிர்த் தியாகம் செய்த 3 ஆயிரம் பேருக்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்யாதது ஏன்? என பிரதமரை கேட்டு,   ட்விட் செய்திருக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர் ஒருவர்.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட எம்பி,ராஜேஸ் என்பவர் கீழ்கண்டவாறு ட்வீர் செய்துள்ளார்.

“பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஜாலியன்வாலா பாக்கில் நடந்த படுகொலையில் 3 ஆயிரம் பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இவர்கள் உயிர் தியாகம் செய்து நூறு ஆண்டுகள் கடந்துவிட்டது.

வல்லபாய் பட்டேலுக்கு ரூ.3 ஆயிரம் கோடியில் சிலை வைக்கும் நீங்கள், ஜாலியன்வாலாபாக்கில் உயிர் நீத்த 3 ஆயிரம் தியாகிகளுக்கு ஒரு ரூபாய் கூட செலவழிக்க மாட்டீர்களா?

52 நிமிடங்கள் நடந்த ஒலி,ஒளி காட்சி நிகழ்ச்சியையும் நிறுத்திவிட்டனர். போதிய நிதி ஒதுக்கி இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்த நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த துறை பிரதமரின் கட்டுப்பாட்டில் வருவதால் வேண்டுகோளை உங்களுக்கு வைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.