ரூ.30 லட்சம் செலவில் தமிழக காவல்துறைக்கு 10ஆயிரம் லத்திகள், 26ஆயிரம் விசில்கள் வாங்க முடிவு

சென்னை:

காவல்துறையை நவீனமயமாக்கும் திட்டத்தின்கீழ் ரூ.30 லட்சம் செலவில் தமிழக காவல் துறைக்கு 10ஆயிரம் லத்திகள், 26ஆயிரம் விசில்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு லத்தி ரூ.165 எனவும், விசில் ஒன்றின் விலை ரூ.50 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

தமிழக காவல்துறையினர் பயன்பாட்டுக்கு லத்திகள் மற்றும் விசில்கள் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன.தற்போது அவர்கள் உபயோகப்படுத்தி வரும்   லத்திகள், விசில்கள் மிகவும் பழையதாகி விட்டதால், புதியதாக லத்திகள், விசில்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி,  ரூ.17 லட்சம் செலவில் 10 ஆயிரத்து 326 லத்திகள் வாங்கப்படுகிறது. ஒரு லத்தியின்  ரூ.165 விலை என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதுபோல, ரூ.13 லட்சம் செலவில் 26 ஆயிரத்து 196 விசில்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு விசிலின் விலை ரூ.50 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

புதிய லத்திகள், விசில்கள் அனைத்தும் சட்டம்- ஒழுங்கு மற்றும் குற்றப் பிரிவு போலீசாருக்கு வழங்கப்படுகிறது. இந்த புதிய லத்திகள், விசில்கள்   ஜூலை மாதம் முதல் காவலர்களுக்கு வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

You may have missed