கட்டுமானத் தொழிலாளர்களின் நலனுக்கு ரூ 31000 கோடி ஒதுக்கீடு! நிர்மலா சீத்தாராமன்…

டெல்லி:

ட்டுமானத் தொழிலாளர்களின் நலனுக்கு ரூ .31000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்து உள்ளார்.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக சாமானிய மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதையடுத்து, வேலை வாய்ப்பின்றி வீடுகளில் முடங்கி உள்ள கட்டுமானத் தொழிலாளர்கள், விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு நிதி உதவிஅறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்து உள்ளார்.

அதன்படி,

கட்டிடம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்காக ரூ.31ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படுவதாக அறிவித்து உள்ளார். இதன் மூலம், நாடு முழுவதும் உள்ள  3.5 கோடி தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்றும், இந்த நிதிகள் மாநில அரசுகள் மூலம் அவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியகா செலுத்த  உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.