ஒகி புயல் பாதிப்புக்கு ரூ.325 கோடி நிவாரணம்…மோடி அறிவிப்பு

டில்லி:

ஒகி புயலால் பாதிப்படைந்த தமிழகம், கேரளா மற்றும் லட்சத்தீவுகளுக்கு நிவாரண நிதியாக ரூ.325 கோடி முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

முன்னதாக லட்சதீவு, தமிழகத்தில் கன்னியாகுமரி, மற்றும் கேரளாவுக்குகு சென்று டில்லி திரும்பிய பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும், புயலால் முழுமையாக பாதிப்படைந்த 1,400 வீடுகள் புதிதாக கட்டி தரப்படும். புயலில் பாதித்தவர்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

You may have missed