சென்னை:
மிழகம் முழுவதும் ரூ.330 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி மூலம்  சென்னை, அரியலூர், தஞ்சை, ஈரோடு, தேனி, கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, நாகை, திருவாரூர், தருமபுரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ரூ.330.96 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை  தொடங்கி வைத்தார்.
பள்ளிக் கல்வித்துறை சார்பில் தருமபுரி, அரியலூர், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகப்பட்டினம், பெரம்பலூர், திருவண்ணாமலை, தேனி, திருவள்ளூர், திருவாரூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 57 கோடியே 53 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 27 பள்ளிக் கட்டடங்கள், 2 ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனக் கட்டடங்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.