டில்லி:

‘‘குஜராத் மக்கள் மீது தலா ரூ. 37 ஆயிரம் கோடி கடன் உள்ளது’’ என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

குஜராத் தாசா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட ராகுல் காந்தி பேசுகையில், ‘‘ உங்கள் தவறான பொருளாதார நிர்வாகத்திற்காகவும், விளம்பரத்திற்காவும் குஜராத் மக்கள் ஏன் துன்பம் அனுபவிக்க வேண்டும். 1995-ம் ஆண்டு குஜராத்தின் மொத்த கடன் தொகை ரூ.9 ஆயிரத்து 183 கோடியாக இருந்தது. 2017-ம் ஆண்டில் குஜராத் மொத்த கடன் தொகை ரூ.2 லட்சத்து 41 ஆயிரம் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது.

அதாவது ஒவ்வொரு குஜராத் மக்களின் தலை மீது தலா ரூ.37 ஆயிரம் கோடி கடன் உள்ளது. தவறான நிர்வாகத்திற்கு குஜராத் மக்கள் ஏன்? பணம் கொடுக்க வேண்டும். 50 லட்சம் வீடுகள் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்து விட்டு பாஜக அரசு வெறும் 4.72 லட்சம் வீடுகள் மட்டுமே வழங்கியுள்ளது’’என்றார்.