நேரடி வரி மூலம் ரூ. 4.8 லட்சம் கோடி வசூல்

டில்லி:

8 மாதத்தில் நேரடி வரி வசூல் 14.4 சதவீதம் அதிகரித்துள்ளது என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

‘‘2017-2018ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான 8 மாதங்களில் ரூ 4 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் நேரடி வரியாக வசூல் செய்யப்பட்டுள்ளது’’ என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தை ஒப்பிடும் போது இது 14.4 சதவீதம் அதிகமாகும். நேரடி வரிகளில் வருமானவரி, முதலியன ஆதாய வரி, பங்குகள் பரிமாற்ற வரி, செல்வ வரி ஆகியன அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.