சத்துணவு முட்டை நிறுவனத்தில் ரூ.4 கோடி சிக்கியது

சென்னை:

சத்துணவு திட்டத்துக்கு முட்டை விநியோகம் செய்யும் கிருஷ்டி பிரைடுகிராம் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை நடந்தது.

தமிழ்நாடு, கர்நாடகாவில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் காட்டப்படாத 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. முக்கிய ஆவணங்களும், வெளிநாட்டு முதலீடு ஆவணங்களும் சிக்கியுள்ளன. இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.