ஊட்டி பஸ் விபத்து: போக்குவரத்து துறை சார்பில் ரூ. 40 லட்சம் நிதியுதவி….எம்.ஆர்.விஜயபாஸ்கர்

சென்னை:

ஊட்டி-&குன்னூர் சாலையில் மந்தாடா பகுதியில் நேற்று முன் தினம் சென்ற அரசு பஸ் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து 150 அடி பள்ளத்தில் உருண்டது, இதில் 9 பேர் பலியாகினர். காயமடைந்தவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வேலுமணி ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்.

பின்னர் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இந்த விபத்தில் பாதித்தவர்களுக்கு போக்குவரத்து துறை சார்பில் முதன் முறையாக ரூ. 40 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.