கொரோனா தடுப்பு பணிக்காக ரூ 44கோடி நிதி ஒதுக்கீடு! அரசாணை வெளியிட்டது தமிழகஅரசு

சென்னை:

மிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்கு ரூ44 கோடி ஒதுக்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

கொரோனா தொற்று பவரல் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் 6வது கட்டமாக ஊரடங்கு ஜூலை 30 வரை  நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு உச்சம் அடைந்துள்ளது. இதுவரை  98 ஆயிரத்தை கடந்த நிலையில், ஓரிரு நாளில் லட்சத்தை எட்டிவரும் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக பணியாற்றி வரும்,  மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள்,  துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு உணவு பொருட்களை வழங்குவது, அவர்களுக்கு தங்குவதற்கான இடவசதியை மேம்படுத்துவது அவர்களுக்கு சம்பளம் அளிப்பது,

மேலும் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகும் ம் நோயாளிகளுக்கு உணவளிப்பது அவர்களுக் கான சிகிச்சை முறைக்கான செலவு உள்பட  வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்காக ரூபாய் 44 கோடி ஒதுக்கீடு செய்ததற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

 

கார்ட்டூன் கேலரி