டில்லி:

கடந்த 31 ஆண்டுகளில் கங்கையை சுத்தப்படுத்த ரூ.4,800 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் கங்கை தூய்மை செயல்பாட்டு திட்டத்தை 1986ம் ஆண்டில் தொடங்கி வைத்தார். ரூ.6788.78 கோடிகளை செலவிட திட்டமிடப்பட்டது. இந்த ஆண்டு ஜூன் வரை ரூ.4,864.48 கோடிகள் செலவிடப்பட்டுள்ளன. மீதமுள்ள ரூ. 1924.30 கோடி இருப்பிலுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

சுமார் 2,500 கி,மீ தூரம் பாயும் கங்கையை 4 பாகங்களாக பிரித்தது. தீர்ப்பாயம் 32 ஆண்டுகளுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பை வழங்கவுள்ளது.

பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் மேஹ்தாவால் 1985ம் ஆண்டில் இவ்வழக்கைத் தொடுத்தார். தூய்மை செய்யப்படவுள்ள பாகங்கள், உத்தரகாண்ட், உ.பி, பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் வழியாக செல்கின்றன.