ரூ.5.78 கோடி ரயில் கொள்ளை: கொள்ளையர்கள் 14 நாட்கள் போலீஸ் காவலுக்கு நீதிமன்றம் அனுமதி

சென்னை:

மிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஓடும் ரயிலில், மேற்கூரையை அறுத்து, ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப் பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கொள்ளையர்களை போலீஸ் காவல் விசாரணைக்கு நீதி மன்றம் அனுமதி வழங்கியது.

கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ந்தேதி தேதி  சேலத்தில் இருந்து சென்னைக்கு ரெயில் மூலம் கொண்டு வரப்பட்ட பணம்  ரூ.5.78 கோடி ரயிலின் மேற்கூறை வெட்டப்பட்டு  கொள்ளையடிக்கப்பட்டது. நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்திய இந்த  சம்பவம் குறித்து  காவல்துறையினர்  ஒவ்வொரு ரெயில் நிலயமும் சென்று விசாரித்து வந்தனர்.

அப்போது, இந்த கொள்ளை சம்பவத்தில்  5 பேர் கொண்ட வடமாநில கொள்ளை கும்பல் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், அவர்கள் கைது செய்யப்டாமல் இருந்தனர். இதற்கிடையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்க விண்வெளி நிறுவனமான இதுதொடர்பான தகவல்களை பகிர்ந்தது. சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலின் 350 கி.மீ.தூரத்தை செயற்கை கோள் மூலம் புகைப்படங்களாக அனுப்பி உதவி செய்jது. இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று அனுப்பி வைத்தது. அதைத்தொடர்ந்து  சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில், மத்திய பிரதேச மாநில கொள்ளையர்களே இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கொள்ளை தொடர்பாக கடந்த 12-ந்தேதி தினேஷ், ரோகன் பார்பி ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து மேலும் 5 கொள்ளையர்கள்  மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர்.

இந்த கொள்ளை சம்பவம்  மோகர்சிங் என வடமாநில கொள்ளை கும்பல் தலைவன் தலைமையில்  நடைபெற்று உள்ளதாக கூறப்படுகிறது. வேறு ஒரு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த மோகர்சிங் உள்பட  5 கொள்ளையர்களையும் அம்மாநில கோர்ட்டில் அனுமதி பெற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று சென்னைக்கு அழைத்து வந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

அப்போது கொள்ளை குறித்து விசாரிக்க கொள்ளையர்களை 14 நாட்கள் போலீஸ் காவலுக்கு கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்று கொள்ளையர்களை விசாரிக்க காவல்துறைக்கு 14 நாட்கள் அனுமதி அளித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.

கார்ட்டூன் கேலரி