சேலம்:

சேலம் அருகே விவசாயி ஒருவரிடம் இருந்து ரூ.5 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலை மீட்கப்பட்டு உள்ளதாக  சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி அபய்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சிலைக்கடத்தல், சிலை திருட்டு போன்ற வழக்குகளை ஐஜி பொன்மாணிக்கவேல் விசாரணை நடத்திய வந்த நிலையில், அவரது ஓய்வுக்கு பிறகு ஏடிஜிபி அபய்குமார் தலைமையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது.

ரூ.5 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலை

இந்த நிலையில், ஐம்பொன் சிலை விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, சென்னை சிலை  திருட்டு தடுப்பு பிரிவு சிறப்பு புலனாய்வு குழு எஸ்பி ராஜாராம் தலைமையிலான குழுவினர் நேற்று காலை 9 மணியளவில் கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி நெடுஞ்சாலையில் உள்ள ராஜசேகரின் விவசாய தோட்டத்தில் அதிரடியாக புகுந்து  சோதனை நடத்தினர்.  அப்போது, அங்கு  பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஐம்பொன்னால் ஆன அம்மன் சிலை ஒன்றை கைப்பற்றினர்.  அந்த சிலை 1.5 அடி உயரமும், 6.5 கிலோ எடையும் இருந்தது. ரூ. 5 கோடி மதிப்பானது என்பது தெரிய வந்தது.

இது தொடர்பாக விவசாயி ராஜசேகரும் கைது செய்யப்பட்டார்.  மேலும்,அந்த சிலை எந்த கோயிலுக்கு சொந்தமானது, அவரிடம் எப்படி கிடைத்து என்பத குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.