சோமானுர் பேருந்து நிலையத்திற்கு கடந்தாண்டு ரூ. 50 லட்சத்தில் பராமரிப்பு செலவு!!

கோவை:

இடிந்து விழுந்த பேருந்து நிலையத்திற்கு கடந்த ஆண்டு ரூ. 50 லட்சம் செலவில் பராமரிப்பு பணி மேற்கொண்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் சோமனூர் பேருந்து நிலைய கான்கிரீட் கூரை இடிந்து விழுந்து 5 பேர் பலியாயினர். மேலும் பலர் காயமடைந்தனர்.

இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. எனினும் கடந்த ஆண்டு தான் ரூ. 50 லட்சம் செலவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் எந்த லட்சனத்துல நடந்திருக்கும் என்பது தற்போது ஏற்பட்ட விபத்து மூலம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ரூ. 50 லட்சம் செலவு செய்ததற்கான ஆதாரம் இதோ…….