டில்லி

சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு கள்ள நோட்டுக்கள் புழக்கம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை நேரத்தில் அந்த நடவடிக்கை எடுக்க முக்கியக் காரணங்களாகக் கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுக்கள் ஒழிப்பு எனக் கூறப்பட்டது.    ஆனால் அந்த நடவடிக்கையின் போது புழக்கத்தில் இருந்த அத்தனை நோட்டுக்களும் மீண்டும் ரிசர்வ் வங்கிக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அதன் பிறகு புதிய ரூ. 500 மட்டும் ரூ.2000  நோட்டுக்களுடன் ரூ 200, ரூ.100, ரூ.50, ரூ.20 மற்றும் ரூ.10 நோட்டுக்களும் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டது.  இந்த புதிய நோட்டுக்களில் கள்ள நோட்டுக்கள் வராது எனவும் அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

ஆனால் இந்த புதிய நோட்டுக்களிலும் கள்ளநோட்டுக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.  கடந்த 2018-19 ஆம் ஆண்டில் ரூ.2000 கள்ள நோட்டுக்கள் நோட்டுக்கள் அதற்கு முந்தைய ஆண்டை விட 21.9% அதிக அளவில் பிடிபட்டுள்ளதாகவும்   அதே நேரத்தில் ரூ.500 கள்ள நோட்டுக்கள் 121% அதற்கு  முந்தைய அண்டை விட அதிகரித்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

”கடந்த 2017 ஆம் வருடம் வெளியிடப்பட்ட ரூ.200 நோட்டுக்களில் அந்த வருடம் 79 கள்ள நோட்டுக்களும் அதற்கடுத்த வருடம் 12,7238 கள்ள நோட்டுக்களும்,ம் பிடிபட்டுள்ளன.   இதைப் போல ரூ. 10, 20 மற்றும் 50 நோட்டுக்கள் முறையே 20.2%, 87.2% மற்றும் 57.3% என அதிகரித்துள்ளன.  ஆனால் ரூ.100 கள்ள நோட்டுக்கள் 7.5% குறைந்துள்ளன” என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.