லக்னோ:

நாடு முழுவதும் பிளஸ்-2 தேர்வுகள் சமீபத்தில் முடிவடைந்தன. இந்நிலையில், உ.பி. மாநிலத்தில் பிளஸ்2 எழுதிய மாணவர்கள் சிலர் விடைத்தாளின் மத்தியில் ரூ.500, ரூ.100, ரூ.50 நோட்டுக்களை வைத்திருந்தது தெரிய வந்ததுள்ளது.

தற்போது பிளஸ்2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் பிளஸ்2  விடைத்தாட்கள் திருத்தப்பட்டு வருகிறது. அப்போது, சில விடைத்தாட்களுடன் ரூபாய் நோட்டுக்களும் இருந்தது தெரிய வந்துள்ளது.

இதைக்கண்ட ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கல்வி அதிகாரிகளுக்கும் தகவல் தரப்பட்டது.

பரீட்சை சரியாக எழுதாத நிலையில், தோல்வி பயத்தில் உள்ள ஒரு சில மாணவர்கள் இதுபோன்று அவர்களின் வசதிக்கேற்ப ரூ.50, ரூ.100, ரூ.500 என பணத்தை வைத்துள்ளனர்.

பணத்தை பார்த்து, விடைத்தாட்களை திருத்தும்  ஆசிரியர்கள் தங்களுக்கு கூடுதல் மதிப்பெண் கொடுத்து தேர்ச்சி பெற வைத்து விடுவார் என்ற ஆசையில் இவ்வாறு பணத்தை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

உபி போன்ற வட மாநிலங்களில் மாணவர்கள் காப்பியடித்த் பரீட்சை எழுத  ஆசிரியர்களும், பெற்றோர்களும் உதவி செய்து வருவதாக ஏராளமான புகார்கள் வந்ததை தொடர்ந்து,    இதனை தடுக்கும் முயற்சியாக தேர்வு அறைகளில் CCTV கேமிராக்கள் கொண்டு கண்கானிக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் காரணமாகவே, தேர்வில் காப்பியடிக்க முடியாததால், தேர்வு விடைத்தாளின் இடையில் பணத்தை வைத்து தங்களை தேர்ச்சி பெற செய்ய புதிய யுக்தியை கையாண்டிருப்பது தெரிய வந்தது.

மாணவர்களின் விடைத்தாள்களில் ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப் பட்ட விஷயம்  பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.