ப.சிதம்பரத்தின் டில்லி வீடு உள்பட ரூ.54 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

டில்லி:

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் டில்லி வீடு மற்றும் கொடைக்கானல் எஸ்டேட் உள்பட ரூ.54 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது, கறுப்பு பண முறைகேடு வழக்கு உள்பட பல வழக்குகள்  நிலுவையில் உள்ளன. சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குகளை தொடர்ந்துள்ளன.  இந்த வழக்குகள் காரணமாக கைது செய்யப்படுவதில் இருந்த தப்பிக்கும் வகையில் முன்ஜாமின் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி ப.சிதம்பரத்தின் ரூ.54 கோடி மதிப்பு சொத்துகள் முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு காரணமாக, டெல்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீடும், கொடைக்கானலில் ப.சிதம்பரம் குடும்பத்திற்கு சொந்தமான 2 காட்டேஜ்கள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளது.

முடக்கப்பட்டுள்ள சொத்துக்கள் விவரம்

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கார்த்தி சிதம்பரத்தின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.