தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 15ந்தேதி நிலவரப்படி 4,73,606 பேர் கைது… ரூ.5.59 கோடி வசூல்

--

சென்னை:

மிழகத்தில் ஊரடங்கை மீறியது தொடர்பாக இன்று காலை (15-5-2020) நிலவரப்படி,  4 லட்சத்து 73 ஆயிரத்து 606 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அதுபோல ரூ.5 கோடியே 59 லட்சம் வசூல் செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 4,73,606 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 4லட்சத்து 46 ஆயிரத்து 633 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

3லட்சத்து 90ஆயிரத்து 562 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை ரூ.5கோடியே 59 லட்சம்  அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,093 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். 3,989 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.