யூகோ வங்கி முன்னாள் தலைவர் மீது ரூ.621 கோடி மோசடி வழக்கு

டில்லி:

யூகோ வங்கியில் கடன் அளித்ததாக போலி கணக்கு காட்டி ரூ.621 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக அவ்வங்கியின் முன்னாள் தலைவர் அருண் கவுல் உள்ளிட்டோர் மீது புகார் எழுந்தது.

அருண் கவுல், 2 தனியார் நிறுவன தலைமை நிர்வாகிகள், 2 ஆடிட்டர்கள் மற்றும் சிலர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. டில்லி, மும்பையில் உள்ள இவர்களது வீடு, அலுவலகங்களில் சிபிஐ இன்று சோதனை நடத்தியது.