Random image

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.750 முதல் ரூ.3ஆயிரம் வரை ஊதிய உயர்வு! தமிழகஅரசு

சென்னை: டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.750 முதல் ரூ.3ஆயிரம் வரை ஊதிய உயர்வு அளித்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.  அதன்படி,  டாஸ்மாக் மேற்பார்வையாளருக்கு ரூ.3,000, விற்பனையாளருக்கு ரூ.1,000, உதவி விற்பனையாளருக்கு ரூ.750 ஊதிய உயர்வை ஜனவரியில் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

டாஸ்மாக் பணியாளர்களுக்கு  ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும், கடந்த மார்ச்,. ஏப்ரல் மாதங்களில்  நடைபெற்ற தமிழக சட்டமன்ற மானிய கோரிக்கை விவாதத்தின் அமைச்சர் தங்கமணி பேசியிருந்தார். அப்போது, , இந்த ஊதிய உயர்வு நடப்பு ஆண்டு செப்டம்பர் முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார். ஆனால், கொரோனா முடக்கம் காரணமாக, ஊதிய உயர்வு வழங்கப்படாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், தற்போது ஊதிய உயர்வு வழங்கி உத்தரவிடப்பட்டு உள்ளது.  அதன்படி,  டாஸ்மாக் மேற்பார்வையாளருக்கு ரூ.3,000, விற்பனையாளருக்கு ரூ.1,000, உதவி விற்பனையாளருக்கு ரூ.750 ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி முதல் வாரத்தில் டாஸ்மாக் பணியாளர்களின் வங்கி கணக்கில் ஊதிய உயர்வை செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.