எஸ்பிகே குழும வருமான வரித்துறை ரெய்டில் ரூ.80 கோடி பறிமுதல்

சென்னை:

ரசு ஒப்பந்ததாரரான செய்யாத்துரை என்பவரின் எஸ்பிகே குழுமங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இதுவரை நடைபெற்றுள்ள சோதனையின் வாயிலாக ரூ.80 பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வரி ஏய்ப்பு புகார் காரணமாக எஸ்.பி.கே. குழும நிர்வாகி செய்யாத்துரையின் சென்னை, அருப்புக்கோட்டை உள்பட பல இடங்களில்   வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்,

எஸ்பிகே குழும நிர்வாகியின் வீடு மற்றும் அலுவலகம்

அரசு முதல்நிலை ஒப்பந்த நிறுவனமான எஸ்பிகே குழுமத்தின் உரிமையாளர் விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியை சேர்ந்தவர் செய்யாத்துரை. இவர், பல்வேறு சாலைகள், கட்டிடங்கள் போன்றவற்றை தமிழகம் முழுவதும் செய்து வருகிறார்.

தற்போது மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து திருமங்கலம் வரையிலான சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் ஒப்பந்தம் எடுத்து பணி நடைபெற்று வருகிறது.. இவருக்கு அருப்புக்கோட்டை மட்டுமின்றி மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் கட்டுமான நிறுவனங்கள் உள்ளன.

இவர்மீதான வரி ஏய்ப்பு புகார் காரணமாக வருமானவரித் துறை அதிகாரிகள் இன்று காலை 6.30 மணிக்கு அருப்புக்கோட் உள்பட பல இடங்கிளில் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர்.  அருப்புக்கோட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு 16-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.

முதற்கட்ட சோதனையில் அவரது நிறுவனங்களில் இருந்த ரூ.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமான விரித்துறையின் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.