Random image

ரூ. 9.17 கோடி  ஊழல்: ஸ்டாலின் கூறுவது தவறு! மின்துறை அமைச்சர் தங்கமணி பதில்

சென்னை:

மிழக மின்துறையில் ஊழல் நடைபெற்றுள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறுவது தவறானது என்று தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி மறுப்பு தெரிவித்து உள்ளார்.

தமிழக மின்சாரத்துறையில் போலியான – பொய்யான கணக்கு காட்டி 9.17 கோடி ரூபாய் ஊழல் நடை பெற்றுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசு மீது குற்றம் சாட்டி உள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மட்டும், ஒரு கோடியே 35 லட்சம் யூனிட்டுகளுக்கு மேற்பட்ட காற்றாலை மின்சாரத்திற்கு இப்படி “போலியான – பொய்யான கணக்கு” தயார் செய்யப்பட்டு 9.17 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது முதற்கட்ட ஆய்வில் வெளிவந்துள்ளதாக தெரிவித்துள்ள ஸ்டாலின்,  இதுகுறித்து  சுதந்திரமான விசாரணை நடைபெற வேண்டும் என்றும், அமைச்சர் தங்கமணி பதவி விலக வேண்டும் என்றும்  வலியுறுத்தி உள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி,  தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஸ்டாலின் செயல்படுகிறார்  என்றார்.

மேலும்,  ஸ்டாலின் தொடர்ந்து தவறான செய்திகளை வெளியிட்டால், நீதிமன்றத்தை நாடுவோம் என்ற அமைச்சர்,  2018ம் ஆண்டு மின் வாரியத்தின் ஆடிட்டிங் மூலம் ஊழல் கண்டறியப்பட்டு 3 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,  ரூ 9.17 கோடி,  வட்டியுடன் ரூ 11 கோடியாக அபராதத்துடன் வசூலிக்கப்பட உள்ளது  என்றும் அமைச்சர் கூறினார்.