ஒரு நாள் குகை தியானம் செய்வதற்கான கட்டணம் ரூ.990 மட்டுமே!

டெஹ்ராடூன்: உத்ரகாண்ட் மாநிலம் கேதர்நாத்தில் பிரதமர் நரேந்திர மோடி தியானம் செய்த ருத்ரா குகையைப் பயன்படுத்த ஒரு நாள் கட்டணமாக ரூ.990 வசூலிக்கப்படுகிறது.

முந்தைய ஆண்டு இந்த குகையின் ஒரு நாள் கட்டணமாக ரூ.3000 வசூலிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதிக கட்டணம் மற்றும் மோசமான காலநிலையால், கடந்தமுறை மிகக் குறைந்தளவு யாத்ரிகர்களே அந்தக் குகையைப் பயன்படுத்தியதால், இந்தமுறை கட்டணம் மூன்றில் ஒரு பங்காக குறைக்கப்பட்டுள்ளது.

தியானக் குகைகளை ஏற்படுத்த வேண்டுமென்ற மோடியின் ஆலோசனைக்கேற்ப கட்டப்பட்டதுதான் இந்த ருத்ரா தியானக் குகை. இந்த குகையில் அனைத்து நவீன வசதிகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்தக் குகையை குறைந்தபட்சம் ஒரு யாத்ரிகர் 3 நாட்களுக்கு பதிவு செய்தாக வேண்டும் என்ற விதிமுறை கடந்தாண்டு இருந்தது. அது, தற்போது ஒரு நாள் என்று குறைக்கப்பட்டுள்ளது.