சபரிமலைக்கு பெண்கள் அனுமதிக்க கோரி வழக்கு தொடர்ந்தது ஆர்எஸ்எஸ்தான்: கேரள அமைச்சர் தகவல்

திருவனந்தபுரம்:

பரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கோரி கடந்த 2006ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது ஆர்எஸ்எஸ்தான் என்று தெரிவித்துள்ள அமைச்சர்,  இப்போது அவர்களே உச்ச நீதிமன்ற தீர்ப் புக்கு எதிராகப் போராடுகிறார்கள்.

பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் அரசியல் ஆதாயத்துக்காக மக்களைக் குழப்புகின்றன என்று கேரள மாநில அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன்  குற்றம் சாட்டி உள்ளார்.

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன்  கோயிலில், அனைத்து வயது பெண்களும் வழிபடலாம், அதைத் தடுப்பது சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது மாநில மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கூறிய, விசுவ இந்து பரிஷத்தின் கேரள மாநில பிரிவு: ஐயப்பன் கோயில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு துரதிருஷ்டவசமானது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போகிறோம் என்றுகூறியுள்ளார்.

மாநில முழுவதும் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மாநில அமைச்சர், கடக்கம்பள்ளி சுரேந்திரன்  சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக் கோரி ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் கள் கடந்த 2006-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது ஏன் என்று கேரள அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் தீர்ப்பு வரும்வரை அனைவரும் அமைதி காக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.