Random image

காங்கிரஸ் கட்சிக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் திடீர் பாராட்டு

 

டில்லி:
காங்கிரஸ் கட்சியை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகத் பாராட்டி பேசியது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். சார்பில் எதிர்கால இந்தியா என்ற 3 நாள் கருத்தரங்கம் டில்லியில் இன்று தொடங்கியது. இந்த கருத்தரங்கில் மத்திய அமைச்சர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள்ங்கள் உள்பட பல துறைகளை சேர்ந்த முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தொடங்கிவைத்து பேசுகையில்,‘‘காங்கிரஸ் வடிவத்தில் ஒரு பெரிய சுதந்திர இயக்கம் நாட்டில் வளர்ந்தது.

அனைத்தையும் தியாகம் செய்யக் கூடிய பல தலைசிறந்த ஆளுமைகளை பெற்றெடுத்தது. அவர்கள் நம்மை இன்றும் ஊக்குவித்து வருகின்றனர். சாதாரண மக்களும் சுதந்திர போராட்டத்தில் இணைத்துக் கொள்ள ஊக்குவித்தது. சுதந்திரம் அடைந்ததில் காங்கிரஸுக்கு பெரிய பங்கு உண்டு” என்றார்.

பாஜக மீதான காங்கிரஸ் கட்சியின் விமர்சனத்தில் கண்டிப்பாக ஆர்எஸ்எஸ் இடம்பெறும். இத்தகைய சூழ்நிலையில் மோகன் பகவத் காங்கிரஸை பாராட்டி பேசியிருப்பது பலரது புருவத்தையும் உயர செய்துள்ளது.