கர்தலா, திரிபுரா.

ந்தியாவில் யார் வசித்தாலும் அவர்கள் இந்துக்கள் தான் என ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கூறி உள்ளார்.

திரிபுரா மாநிலத்தில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.   ஐந்து நாள் பயணமாக வந்துள்ள அவர்  வடகிழக்குப் பகுதியில் ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் பணிகளைப் பற்றி ஆய்வு செய்ய வந்துள்ளார்.   அடுத்த வருட ஆரம்பத்தில் திரிபுரா மாநிலத்தில் தேர்தல் நடக்க உள்ளது குறிப்பிடத் தக்கது.

தனது பயணத்தின் ஒரு பகுதியாக அவர் திரிபுரா மாநில தலைநகரான அகர்தலாவில் உள்ள சுவாமி விவேகானந்தா மைதானத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.   அப்போது அவர் தனது உரையில், “இந்துத்வா என்பது வேறு, இந்துக்கள் என்பது வேறு.   இந்துத்வா என்பது நாட்டிலுள்ள அனைத்து மக்களையும் இணைப்பதே ஆகும்.    இந்தியாவில் வசிக்கும் அனைத்து மக்களும் இந்துக்களே.   அவர்கள் இஸ்லாமியராக இருந்தாலும் அவர்களும் இந்துக்களே ஆவார்கள்.

இந்தியாவை இந்துக்கள் நாடாக அமைக்க வேண்டும்.  இது மத வாதத்துக்காக சொல்லவில்லை.    உலகெங்கும் இந்துக்கள் துன்புறுத்தப் படும் போது அவர்களுக்கு ஒரு புகலிடமாக இந்தியா விளங்கவே நான் இதைச் சொல்கிறேன்.    கடந்த 1947ஆம் ஆண்டு நடந்த பிரிவினையால் இந்த அரசு பலவீனம் அடைந்து இந்து  சமாஜம் வீழ்ந்தது.    இந்திய மக்களிடையே பல நாட்களாக இருந்த ஒற்றுமையை இந்தப் பிரிவினை பாழாக்கியது.

இந்துக்களிடையே ஒரு ஒற்றுமையை உண்டாக்கவே ஆர் எஸ் எஸ் விரும்புகிறது.    இந்த இயக்கம் நடத்தும் ஷாகாக்களில் (தினசரி கூட்டங்கள்) கலந்துக் கொள்ள மக்கள் வர வேண்டும்.    அதன் மூலம் தேச ஒற்றுமையும் சுய முன்னேற்றமும் மேலும் மேம்படும்.  நமது சனாதன தர்மம் என்பது அனைத்து மக்களுடனும் ஒற்றுமையாக செயல் படுவது மட்டுமே ஆகும்”  எனத் தெரிவித்துள்ளார்.