Random image

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பிரனாப் முகர்ஜி…விழா தொடங்கியது

நாக்பூர்:

பிரனாப் முகர்ஜி கலந்துகொண்ட ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம் நிறைவு விழா தொடங்கியது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் பயிற்சி முகாம் நிறைவு விழா இன்று நடக்கிறது.

இதில் முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி கலந்துகொண்டுள்ளார். இந்நிகழ்ச்சி சற்று முன் ஆர்எஸ்எஸ் உறுதி மொழி ஏற்புடன் தொடங்கியது. முன்னதாக ஆர்எஸ்எஸ் கொடி ஏற்றப்பட்டது. உறுதி மொழி ஏற்பின் போது பிரனாப் முகர்ஜி எழுந்து நின்றார்.

புகைப்படம் உதவி: ஏஎன்ஐ…நன்றி