சென்னை

த்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஆர் எஸ் எஸ் குறித்த வாக்கியத்தை முழுமையாக நீக்கக் கோரி அந்த இயக்க செயலாளர் மேல் முறையீடு செய்துள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களைத் தமிழக அரசுப் பள்ளிக் கல்வித் துறை வடிவமைத்து அச்சடித்து வழங்கி வருகிறது.  அவ்வகையில் 10 வகுப்புக்கான சமூக அறிவியல் இரண்டாம் பருவ பாடப்புத்தகம் அச்சடிக்கப்பட்டு வெளியாகி உள்ளது.  இந்த புத்தகத்தில் 50 ஆம் பக்கத்தில் ஆர் எஸ் எஸ் அமைப்பு சுதந்திரத்துக்கு முன்பு இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டிருந்ததாக உள்ளது.

இதற்கு ஆர் எஸ் எஸ் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  அந்த அமைப்பின் சென்னை மாவட்டச் செயலாளர் சந்திரசேகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வாக்கியங்களைத் தமிழ் மற்றும் ஆங்கில வடிவத்தில் உள்ள இரு புத்தகங்களில் இருந்தும் நீக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கை நீதிபதி ஆதிகேசவலு விசாரித்து வந்தார்.

அந்த வழக்கில் இனி வரும் புத்தகங்களில் அந்த வாசகத்தை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள புத்தகங்களில் அந்த வாசகத்தை ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்   அரசு தரப்பில் அதற்கு ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஆனால் ஆர் எஸ் எஸ் தரப்பில் அந்த வரிகளை அனைத்து புத்தகங்களில் இருந்தும் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.