புதுடெல்லி:

பிரதமர் பதவிக்கு நிதின் கட்கரி பெயர் பரிசீலிக்கப்படும் நிலையில், அவருடன் ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் பையன்ஜி ஜோஷி சந்தித்துப் பேசினார்.


பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் நிதின் கட்கரி பிரதமராவார் என்று சமீபகாலமாக பேச்சு எழுந்துள்ளது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், நாக்பூரில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் பையன்ஜி ஜோஷி திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய நிதின் கட்கரி, பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராவார் என்று கூறுகின்றன.

சில கருத்துக்கணிப்புகளில், பாஜக கூட்டணி 300 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் இந்த முடிவுகள் ஏதும் இறுதியானது அல்ல. பிரதமர் மோடியின் தலைமையில்தான் தேர்தலை சந்தித்தோம்.  எனவே, அவரது தலைமையில் தான் ஆட்சி அமைப்போம். இதில் சந்தேகம் கிடையாது என்றார்.