கேரளாவில் வன்முறை மூலம் ஆர்எஸ்எஸ் வளர முடியாது….சிபிஎம் தலைவர்

திருவனந்தபுரம்:

கேரளா மாநில சிபிஎம் தலைவர் கோடியேறி பாலகிருஷ்ணன் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ‘‘இந்தியாவில் ஆர்எஸ்எஸ் வன்முறை மூலம் மட்டுமே வளர்ந்தது. இதர மாநிலங்களை போல் கேரளாவில் வன்முறையை தூண்ட முடியாது. அவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியை அழிக்க நினைக்கின்றனர். நாங்கள் அதை செய்ய விரும்பவில்லை. பாஜக.வினர் உயிருடன் இருந்தால் தான் கம்யூனிஸ்ட் கட்சியில் அவர்களால் இணைய முடியும். அவர்கள் உயிருடன் இல்லை என்றால் எப்படி கம்யூனிஸ்ட்களாக நாளை மாறுவார்கள். பல பாஜக தலைவர்கள் எங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். வாசு, உன்னிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் எங்களிடம் இணைந்துள்ளனர்.

நாங்கள் யாரையும் அகற்ற முயற்சிக்கவில்லை. எந்த ஒரு கம்யூனிஸ்டும் அவ்வாறு நினைக்கமாட்டார்கள். ஏன் என்றால்? அவர்கள் நாளைக்கு இங்கு இணைய உள்ளவர்கள். இதர கட்சியினர் உயிருடன் இருந்தால் தான் அவர்களால் எங்களிடம் வந்து சேர முடியும். அதனால் நாங்கள் யாருடைய உயிரையும் எடுக்க விரும்பவில்லை’’என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், ‘‘கேரளாவில் கொலை அரசியலை தொடங்கியதற்கு சிபிஎம் பொறுப்பு கிடையாது. ஆங்கிலேயர் காலத்தில் எங்களது கட்சி தொண்டர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பொய் வழ க்குகள் பதிவு செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். மெயாராத் சங்கரன் என்ற காங்கிரஸ் தலைவர் கம்யூனிஸ்ட்டில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியின் வரலாறு குறித்த புத்தகத்தை அவர் மலையாளத்தில் வெளியிட்டார். அவர் காங்கிரஸ் கட்சியினரால் கொல்லப்பட்டார். இது போன்று பல சம்பவங்கள் நட ந்துள்ளது.

ஆங்கிலேயர்கள் சென்ற பின்னரும் காங்கிரஸ் கட்சியினர் கம்யூனிஸ்ட்களை தொடர்ந்து தாக்கினர். சேலம் சிறையில் எங்களது கட்சியினர் 32 பேர் கொல்லப்பட்டனர். இவ்வளவு சம்பவங்கள் நடந்தும் எங்களது கட்சி மரணமடையவில்லை. இது போன்ற தாக்குதல் சமயங்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளும் செயல்களில் கம்யூனிஸ்ட்கள் ஈடுபட தொடங்கியுள்ளனர். அப்போது காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பிரஜா சோசியலிஸ்ட் கட்சி, முஸ்லிம் லீக் போன்று அனைத்து கட்சியினராலும் நாங்கள் தாக்கப்பட்டோம்’’ என்றார்.

மேலும் பாலகிருஷ்ணன் கூறுகையில், ‘‘இது போன்ற சம்பவங்களில் உயிர் நீத்த கம்யூனிஸ்ட் தியாகிகளின் எண்ணிக்கை 600 ஆகும். இதில் 217 பேர் பாஜக.வினரால் கொல்லப்பட்டவர்கள். சில சம்பவங்களில் மட் டுமே கம்யூனிஸ்ட்களுக்கு தொடர்பு இருக்கிறது. அதை மறுக்கவில்லை. இதையும் நாங்கள் தவிர்க்க நினைக்கிறோம். இதை ஒரு கட்சி மட்டுமே தனியாக தீர்த்து விட முடியாது.

அரசியல் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. அதனால் தாக்குதலில் ஈடுபடுவதில் எங்களுக்கு விருப்பம் கிடையாது. நாங்கள் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளோம். அரசியலில் கொள்கைகள் குறித்து விவாதிக்க வேண்டும். ஆயுதங்கள் எந்த வழியிலும் அரசியலை வலுப்படுத்தாது. ஆயுதங்கள் உதவியை கொண்டு எந்த கட்சியும் எங்களை அகற்றிவிட முடியாது’’ என்றார்.