பிரதமர் மோடி மீது ஆர்எஸ்எஸ் அதிருப்தி: மாயாவதி தகவல்

லக்னோ:

மக்கள் முன்பு பொய் வாக்குறுதிகளை அளிக்கும் மோடி மீது ஆர்எஸ்எஸ் அதிருப்பதியில் இருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியிருக்கிறார்.


தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லும் முன்பு செய்தியாளர்களிடம் மாயாவதி  பேசியதாவது;

பிரதமர் மோடியை ஆர்எஸ்எஸ் கைகழுவி விட்டது. இதுவே அவர் பிரதமர் பொறுப்பில் தோல்வியடைந்துவிட்டதற்கான ஆதாரம்.

பாஜகவுக்காக ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பிரச்சாரம் செய்யவில்லை. மக்கள் கூட்டம் முன்பு பிரதமர் மோடி பொய் வாக்குறுதிகளை அளிப்பதை ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை.

2014 தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக ஆர்எஸ்எஸ் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. இம்முறை அதுபோன்று எங்கும் நடக்கவில்லை.

தேர்தல் பிரச்சாரத்தின்போது கோயில்களுக்கு செல்ல அரசியல்வாதிகளுக்கு தடை விதிக்க வேண்டும்.
மோடியின் கப்பல் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

மே 23-ம் தேதி மோடி தோற்கடிக்கப்படும் நாளாக இருக்கும் என்றார்.