மும்பை: மகாராஷ்டிராவை 4 ஆக பிரிக்க வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதி எம்ஜி வைத்யாவின் கோரிக்கையை ஆளும் சிவசேனா கூட்டணி அரசு நிராகரித்துவிட்டது.

இது தொடர்பாக எம்.ஜி வைத்யா கூறியிருப்பதாவது: மகாராஷ்டிராவில் 11 முதல் 12 கோடி மக்கள் வாழுகின்றனர். இத்தனை கோடி மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த எளிமையாகும்.

ஆகவே இந்த மாநிலத்தை 4 மாநிலங்களாக பிரிக்க வேண்டும். அவ்வாறு பிரிக்கப்பட்டால் ஒவ்வொரு மாநிலத்திலும் 4 கோடி மக்களாவது இருப்பார்கள்.

கொங்கனுடன் மும்பையை ஒரு மாநிலமாக்க வேண்டும். 2வது மேற்கு மகாராஷ்டிரா என்ற மாநிலத்தை பிரிக்க வேண்டும். 3வது மாநிலம் விதர்பா, 4வது மராத்வாடா மாநிலமாக இருக்க வேண்டும். அதில் வடக்கு மகாராஷ்டிராவும் அடங்கும் என்றார்.

ஆனால் இதனை அம்மாநில வீட்டுவசதி அமைச்சர் ஜிதேந்திர அவாத் நிராகரித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: ஆர்.எஸ்.எஸ் மகாராஷ்டிராவை மொழியை மையப்படுத்தி பிரிக்க நினைக்கிறது.

மாநிலத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கிறது. புவியியல் அடிப்படையில் மாநிலத்தை பிரிக்கக்கூடாது. மகாராஷ்டிரா மக்கள் உங்களுக்கு மன்னிப்பு வழங்க மாட்டார்கள். மகாராஷ்டிரா ஒன்றாகும், அது ஒற்றுமையாக இருக்கும், ”என்றார் அவத்.

2014ம் ஆண்டு விதர்பாவை தனி மாநிலமாக்குவோம் என்று பாஜக வாக்குறுதி அளித்தது. அப்போதைய தேர்தலில் அந்த கட்சிக்கு 44 இடங்கள் கிடைத்தன. அதன்பிறகு அது நிறைவேற்றப்படவில்லை. 2019ல் பாஜக 29 இடங்களில் தான் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.