ஆர்.எஸ்.எஸ். ஒரு விஷம்!: சொன்னவர் சர்தார் வல்லபாய் படேல்!

சுதந்திர போராட்ட வீரரரும் இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக இருந்து  இந்தியாவை ஒருங்கிணைத்ததில் முக்கிய பங்குவகித்தவருமான சர்தார் வல்லபாய் படேலுக்கு உலகிலேயே மிகப் பெரிய சிலையை அமைத்திருக்கிறது மத்திய பாஜக அரசு. பாஜகவின் ஆணி வேரான ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினரும் இதைக் கொண்டாடி களிக்கின்றனர்.

ஆனால் மகாத்மா காந்தி கொல்லப்பட்டபோது, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைத் தடை செய்தவர் அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்பாய் படேல்தான்.

 

“அது மட்டுமா.. ஆர்.எஸ்.எஸ். குறித்து அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதைப் பாருங்கள்” என்று இதை தற்போது சமூகவலைதளங்களில் பலரும் பகிர்ந்துவருகிறார்கள்.

பட்டேலின் அந்தக் கருத்துக்கள்:

“ஆர்எஸ்எஸ்சின் நடவடிக்கைகள் தேசத்துக்கும் அரசாங்கத்துக்கும் பெரிய ஆபத்தாக இருக்கின்றன.

அவர்களின் பேச்சுகளும் எழுத்துகளும் மதவாத விஷத்தில் தோய்ந்திருக்கின்றன. அந்த விஷம் கடைசியாக காந்தியின் தியாகத்தில் முடிந்திருந்திருக்கிறது. காந்தி இறப்பில் அவர்கள் இனிப்புகள் பகிர்ந்து கொண்டாடி இருக்கிறார்கள்.

‘ஆர்எஸ்எஸ்ஸோ வேறு இயக்கமோ தேசத்தை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டேன்.

ஹிந்து ராஷ்டிரம் என்பது ஒரு பைத்தியக்கார சிந்தனை.

‘மறந்து விடாதீர்கள். ஹிட்லரின் நாஜிகள், முசோலினியின் பாசிஸ்டுகள் போல இவர்களும் இன, மதவெறியை, சர்வாதிகாரத்தை போற்றும் இயக்கம்தான்” என்றார் சர்தார் வல்லப்பாய் படேல்!

 

Leave a Reply

Your email address will not be published.