இந்தியாவின் தன்மையை மாற்ற ஆர்எஸ்எஸ் முயல்கிறது: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

லண்டன்:

ந்தியாவின் தன்மையை மாற்றி நாட்டை பிளவுபடுத்த ஆர்எஸ்எஸ் முயற்சிக்கிறது என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.

லண்டனில் உள்ள  மூலோபாய ஆய்வுகள் சர்வதேச நிறுவனத்தில் (International Institute of Strategic Studies in London) உரையாற்றிய ராகுல்காந்தி  பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை கடுமையாக தாக்கி பேசினார்.

வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, கடந்த 23ந்தேதி ஜெர்மனியில்  உள்ள ஹம்பர்க் (Hamburg) நகரில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது,   இந்தியாவில் பாஜக அரசு தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினரை வளர்ச்சித் திட்டங்களில் இருந்து புறக்கணிப்பதாக குற்றம்சாட்டினார். 21 ஆம் நூற்றாண்டுச் சூழலில் இதுபோன்ற அணுகுமுறைகள் ஆபத்தானவை. இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை காரணமாகவே கும்பல் படுகொலைகள் அதிகரித்திருப்பதாகவும் ராகுல்காந்தி கூறினார்.

அரசு வேலைகளிலும் ராணுவத்திலும் சேர குறிப்பிட்ட சமூகத்தினருக்க தடைவிதிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய ராகுல்காந்தி, இதுதான் நாட்டில்  ஐஎஸ் போன்ற பயங்கரவாத இயக்கங்கள் காலூன்ற காரணமாகிவிட்டதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில், ஜெர்மனி நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு லண்டன் வந்த ராகுல்காந்தி அங்குள்ள  மூலோபாய ஆய்வுகள் சர்வதேச நிறுவனத்தில் உரையாற்றினார்.

அப்போது,  “காங்கிரஸ் அனைவருக்கும் சொந்தமானது என்று தெரிவித்த ராகுல்,  எங்களது குறிக்கோள்… வேறுபாடுகளில் ஒற்றுமை என்ற சிந்தனை பரப்ப வேண்டும் என்பதே என்று கூறினார்.

அனால் தற்போது இந்தியாவை ஆட்சி செய்யும் அரசாங்கம் வேறு விதமாக வேலை செய்து வருகிறது. அவர்கள் இந்தியாவின் தன்மையை மாற்ற முயல்கிறார்கள். இந்தியாவில் வேறு எந்த நிறுவனமும் செயல்படக்கூடாது என்ற நிலையில் மற்ற நிறுவனங்களை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள்.

பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் சேர்ந்து சொந்த மக்களைப் பிரிக்க நினைக்கிறார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பு நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கிறது.   அவர்கள் நம் நாட்டில் வெறுப்பை பரப்புகிறார்கள். பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தின் பேச்சு மட்டுமே நீண்டதாக உள்ளது. அவர்களால் மக்களிடையே வெறுப்புக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும் போதிய பாதுகாப்பின்றி  விவசாயிகள் தற்கொலை செய்துக் கொள்கின்றனர். இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை பார்க்க முடியவில்லை,  24 மணி நேரத்தில் சீனா 50,000 மக்களுக்கு வேலை தருவதாகவும், அதே நேரத்தில் இந்தியாவில் 450 பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு மட்டுமே கிடைக்கிறது என்றும்   சுட்டிக்காட்டி ராகுல்காந்தி பேசினார்.