பிரக்யராஜ்:

யோத்தியில் 2025ம் ஆண்டுக்குள் ராமர்கோவில் கட்டப்பட வேண்டும் என்று  மத்தியஅரசுக்கு ஆர்எஸ்எஸ் ‘கெடு’ விதித்து உள்ளது.

அயோத்தியில் ராம் மந்திரை நிர்மாணிப்பதற்கான காலக்கெடு 2025ம் ஆண்டு வரை மட்டுமே உ.பி. கும்பமேளாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில்   ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் பையாஜிசி ஜோஷி கூறி உள்ளார்.

உ.பி.யில் கடந்த 15ந்தேதி முதல் கும்பமேளா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி திரிவேணி சங்கமத்தில் புனித நீராட உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள், மடாதிபதிகள், சாமியார்கள் என அனைத்து தரப்பினரும்  உ.பி. மாநிலத்தில் குவிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிரக்யராஜ் நகரில் ஆர்எஸ்எஸ் சார்பில் பல்வெறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் பையாஜிசி ஜோஷி கலந்துகொண்டார். அப்போது,  சாதுக்கள் மத்தியில் பேசிய அவர், 2025ம் ஆண்டுக்குள் ராமர்கோவில் கட்டப்படும் என்றும் உறுதியாக தெரிவித்தார்.

ஏற்கனவே முன்னாள் ஆர்எஸ்எஸ் தலைவர் தலைவர் மோகன் பகவத் கூறியிருந்த நிலையில், தற்போதைய பொதுச்செயலாளரும் அதே கருத்தை 2வது முறையாக வலியுறுத்தி உள்ளார்.

ஆனால், அயோத்தியில் ராம் கோவில் கட்டுமானத்திற்காக ஒரு சட்டத்தை நரேந்திர மோடி அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று மோகன் பகவத் கூறியிருந்த நிலையில், தற்போதைய ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர்  ஜோஷியின் கருத்து முரணாக இருந்தது. இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பதற்கான தாமதம் அநீதிக்கு வழிவகுக்கும் என்று பகத் கூறினார்.

அயோத்தியில் உள்ள கோயிலின் கட்டுமானம் 2025 ஆம் ஆண்டில் முடிவடையும் என்று நான் சொன்னேன். அயோத்தியில் உள்ள விவகாரத்தை விரைவில் உச்சநீதிமன்றம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இதன் காரணமாக இஸ்லாமிய  சமுதாயத்தில் உள்ளவர்கள் காயமடைவதில்லை, மேலும் மதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.