ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ராகுல்காந்திக்கு அழைப்பு….எதிர்கட்சிகளையும் அழைக்க திட்டம்

டில்லி:

செப்டம்பரில் நடக்கும் நிகழ்ச்சிக்கு ராகுல்காந்தி மற்றும் எதிர்கட்சி தலைவர்களை அழைக்க ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ளது.

செப்டம்பர் 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை டில்லி விஜ்யன் பவனில் ஆர்எஸ்எஸ் சார்பில் 3 நாள் நிகழ்ச்சி ஒன்று நடத்த திட்டமிடப்ப்டடுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மற்றும் எதிர்கட்சி தலைவர்களை அழைக்க ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ளது என்று பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகத் கலந்துகொள்கிறார்.

ஆர்எஸ்எஸ் மீது ராகுல்காந்தி பல குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறார். இந்தியாவில் இந்து-இஸ்லாமியர் இடையிலான சகோதரத்துவம் கொண்ட இந்தியாவில் இயற்கையை ஆர்எஸ்எஸ் சீரழிக்கிறது. பாஜக.வும் ஆர்எஸ்எஸூம் மக்களை பிரித்து வெறுப்புணர்வை பரப்புகிறது.

ஆர்எஸ்எஸ்.ல் பெண்களுக்கு இடமில்லை. அவர்கள் இரண்டாம் தர குடிமக்களாக தான் நடத்தப்படுகிறார்கள் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வரும் ராகுல்காந்தியை ஆர்எஸ்எஸ் தனது நிகழ்ச்சிக்கு அழைப்பதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் நாக்பூரில் நடந்த ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பிரனாப் முகர்ஜி பல எதிர்ப்புகளையும் மீறி கலந்தகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.