ஆர். எஸ். எஸ். முஸ்லிம் பிரிவின் சைவ ரம்ஜான் விருந்து

காந்திநகர்

குஜராத் மாநில ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் முஸ்லிம் பிரிவு முஸ்லிம் ராஷ்ட்ரிய மன்ச்.  இந்த பிரிவு ரம்ஜானை முன்னிட்டு நடைபெறும் இஃப்தார் விருந்தில் சைவ உணவு மட்டும் பரிமாற உள்ளது

இந்த முஸ்லிம் பிரிவின் மாநில அமைப்பாளர் சலிம்கான் என்பவர்,  இவர் பாரூச் நகரில் புகழ்பெற்ற பிசினெஸ் மேன்.  இவர் இது பற்றி கூறுகையில், முஸ்லிம் ராஷ்ட்ரிய மன்ச் விசேஷ இஃப்தார் விருந்துகள் நடத்த இருப்பதாக கூறினார்.  இவ்விருந்துகள் பசு பாதுகாப்பை முன்நிறுத்தி நடை பெறும் என்றும், இவ்விருந்துகளில் சைவ உணவுகள் மட்டுமே பரிமாறப்படும் என தெரிவித்தார்

மேலும் கூறுகையில் அனைத்து முக்கிய நகரங்களிலும் நடத்தப்படும் இந்த விருந்தில், பால், இனிப்புகள் மற்றும் சைவ உணவுவகைகள் இடம்பெறும் என்றும்,  இவ்விருந்துக்கு இந்திரேஷ் குமாரை அழைப்ப இருப்பதாகவும் தெரிவித்தார்

இப்பிரிவின் அகமதாபாத் அமைப்பாளரான இக்பால் சையத் பசும்பாலில் இருந்து தயாரிக்கப்படும் இனிப்புகள், பழங்கள் மற்றும் குஜராத்திய சைவ உணவு வகைகள் ஆகியவை அகமதாபாத்தில் நடைபெறும் இஃப்தார் விருந்துகளில் இடம்பெறும் என தகவல் அளித்தார்

மேலும் அவர், ஜுஹாபுராவில் ஒரு விருந்தும், பழைய அகமதாபாத்தில் ஒரு விருந்தும் ஏற்பாடு செய்யப்படும் என்றும், மொத்தம் சுமார் 2000 பேர் கலந்துக் கொள்வார்கள் என கூறினார்.

ஆர் எஸ் எஸ் முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல என்பதும் முஸ்லிம்களின் பிரச்னைகள், முஸ்லிம் பெண்களின் சட்ட பாதுகாப்பு, படிப்பறிவை வளம் படுத்துதல்,  வேலை வாய்ப்பை அதிகப்படுத்துதல் ஆகியவைகளை முன்நிறுத்தியே இந்த இஃப்தார் விருந்துகள் அளிக்கப்படுகின்றன என இக்பால் சையத் கூறினார்

முஸ்லிம் ராஷ்ட்ரிய மன்ச் 2002ஆம் வருடம், அப்போதைய ஆர் எஸ் எஸ் தலைவர் சுதர்சன் ஆரம்பித்து வைத்த அமைப்பு.   ஆர் எஸ் எஸ் முஸ்லிம் மக்களை சென்றடைய வேண்டும் என்னும் நோக்கத்தில் இது ஆரம்பிக்கப் பட்டது