Random image

பசுஞ்சாணத்தில் சோப்பும் ஷாம்புவும் : ஆர் எஸ் எஸ் விற்பனை

துரா

சுஞ்சாணம் மற்றும் கோமியத்தால் உருவாக்கப்பட்ட குளியல் சோப், ஷாம்பு உள்ளிட்டவற்றை ஆர் எஸ் எஸ் சார்பில் தயாரிக்கப்பட்டு அமேசான் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.

ஆர் எஸ் எஸ் அமைப்பின் சார்பில் பல பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.   குளியல் சோப், ஷாம்பு,  ரெடிமேட் ஆடைகள் உள்ளிட்ட பலவற்றை தயாரித்து விற்பனை செய்ய அமைப்பு திட்டமிட்டுள்ளது.   இந்த அமைப்புக்கு தீன் தயாள் மருந்தகம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.   சமீபத்தில் இந்த மருந்தகத்தின் செயலாளர் மனிஷ் குப்தா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், “பசுவின் சாணம் மற்றும் கோமியம் உள்ளிட்ட பொருட்களை மூலப் பொருட்களாக வைத்து குளியல் சோப் ஷம்பு உள்ளிட்டவைகளை தயாரிக்க உள்ளொம்.  அத்துடன் நீரிழிவு நோயாளிகளுக்கான மருந்து, உடல் பருமனை குறைக்கும் மருந்து, பற்பசை உள்ளிட்ட பல பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

எங்களிடம் 90 பசுக்கள் மட்டுமே உள்ளது.  அதனால் கோமியம் மற்றும் சாணத்தை பல இடங்களில் இருந்து சேகரித்து வருகிறோம்.   தற்போது சிறிய அளவில் தயாரிக்கப்படும் இப்பொருட்களை அமேசான் ஆன்லைன் நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்ய உள்ளோம்.   அத்துடன் விற்பனை அதிகரிக்க அதிகரிக்க உற்பத்தியையும் அதிகரிக்க உள்ளோம்.

இது தவிர மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் அணியும் ஜிப்பா போன்ற குர்தாக்கள் தயாரித்து விற்பனை செய்ய உள்ளோம்.  இதன் மூலம் நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.  ஒவ்வொரு மாதமும் ரூ. ஒரு லட்சத்துக்கு மருந்து பொருட்களும் ரூ.3 லட்சத்துக்கு ஆடைகளும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.