பாரம்பரியத்தை மதிக்காமல் ஆர்.எஸ்.எஸ். தலைவர், இருமுடி இன்றி 18 படி ஏறினார்!: சபரிமலை புதிய தந்திரி குற்றச்சாட்டு

ருமுடி கட்டாமல் 18 படிகளை ஏறியதாக ஆர்எஸ்எஸ் தலைவர் வாலசன் மீது சபரிமலையின் புதிய தந்திரி குற்றம்சாட்டியிருக்கிறார்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை ஆர்.எஸ்.எஸ். , பா.ஜ.க. உட்பட இந்து அமைப்புகள், “சபரிமலையின் பாரம்பரியத்துக்கு எதிரான உத்தரவு இது” என்று கடுமையாக எதிர்த்தன. சபரி மலை அருகில் போராட்டம் நடத்தின. இது தடியடியில் முடிந்தது.

இந்தநிலையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் வாலசன்  இருமுடி கட்டாமல் சபரிமலை கோயிலின் 18 படிகளில் ஏறியதாக கோயிலின் புதிய தந்திரி குற்றம்சாட்டியிருக்கிறார்.

சபரிமலையில் அய்யப்பனை தரிசிக்க, 18 படிகள் வழியாக செல்வது முக்கியமானதாக பக்தர்களால் கருதப்படுகிறது. ஆனால் இதில் ஏறி அய்யப்பனை தரிசிக்க வேண்டுமானால் இருமுடி கட்டிச் செல்ல வேண்டும். மற்றவர்கள் பக்கவாட்டுப் படிகளில் ஏறி அய்யப்பனை தரிசிக்கலாம்.

கோயிலின் முதன்மை தந்திரி , அவருடைய குடும்பத்தினர் மற்றும் பந்தள மகாராஜா குடும்பத்தினர் மட்டுமே இருமுடி கட்டாமல் 18 படிகள் ஏற முடியும்.

ஆனால் இந்த பாரம்பரியத்தை மீறி, ஆர்எஸ்எஸ் தலைவர் வாலசன், இருமுடி கட்டாமல்  பிடிவாதமாக பதினெட்டு படிகளில் ஏறி அய்யப்பனை தரிசித்தார் என்று கோயிலின் புதிய தந்திரி குற்றம்சாட்டியிருக்கிறார்.

இது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

“அனைத்து வயது பெண்களையும் சபரிமலைக்கு அனுமதிக்கலாம் என்ற உத்தரவு, இந்து பாரம்பரியத்தை மீறுவதாகும் என்று எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தும் ஆர்.எஸ்.எஸ். உட்பட இந்து அமைப்பினர் தங்கள் சுயலாபத்துக்காகவே அப்படி நடந்துகொள்கிறார்கள் என்பது ஆர்.எஸ்.எஸ். தலைவர் வாலசன் செயல் மூலம் அம்பலமாகிவிட்டது” என்று அய்யப்ப பக்தர்கள் தெரிவிக்கிறார்கள்.

“அய்யப்பன் கோயில் விவகார்தை வைத்து, கேரளாவில் பாஜக வளர வேண்டும்” என்று அக்கட்சியின் கேரள தலைவர் பேசிய வீடியோ மற்றும் ஆடியோ சமீபத்தில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.